இலங்கையின் பிறப்பு வீதத்தில் சரிவு
பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் எதிர்காலத்தில் இலங்கை மக்கள் தொகையில் கணிசமான வீழ்ச்சியை சந்திக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகையியல் துறை பேராசிரியர் இந்திரலால் டி சில்வா கூறுகிறார்.
இலங்கையில் பிறப்பு வீதத்தில் 25% வீழ்ச்சி காணப்படுவதே எதிர்கால சனத்தொகை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என பேராசிரியர் டி சில்வா அடையாளம் கண்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு பதிவான பிறப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை 90,000 குறைவடையும் எனத் தெரிவித்த அவர், தற்போதைய பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை நெருங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் இந்த நிலை மேலும் மோசமடையலாம் என்றும் பேராசிரியர் எச்சரிக்கிறார்.
(Visited 9 times, 1 visits today)