சிங்கப்பூர் நிறுவனங்கள் எடுத்துள்ள தீர்மானம் – ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தீர்மானம்
சிங்கப்பூரில் 10இல் 8 நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு குறைந்தது ஒரு மாதச் சம்பளத்தை போனசாக வழங்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு நிலவரம் வலுவிழந்திருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டபோதும் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கப் பல நிறுவனங்கள் திட்டுமிட்டுள்ளன.
எனினும், சென்ற ஆண்டு அதிகமான தொகையை போனசாக வழங்கத் தயாராக இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுடின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிறுவனம் அண்மையில் நடத்திய காலாண்டுக்கான வேலைச் சூழல் கருத்தாய்வில் இந்த விவரம் தெரியவந்தது.
525 நிறுவனங்களைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவற்றில் 84 சதவீதம் நிறுவனங்கள் குறைந்தது ஒரு மாதச் சம்பளத்தை போனசாக வழங்கத் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தன.
சென்ற ஆண்டு இந்த விகிதம் 87 சதவீதம் பதிவானது. நிதி, சொத்துச் சந்தைத் துறைகளில் உள்ள நிறுவனங்கள் கூடுதல் தொகையை போனசாக வழங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.