ஐரோப்பா

மரணம் குறித்து பிரிகோஜினை முன்னதாகவே எச்சரித்த புட்டினின் நெருங்கிய நண்பர்!

ரஷ்ய கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ள நிலையில் அவருடைய மரணம் தொடர்பில் சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.

அந்தவகையில்  அவருடைய மரணம் குறித்து தற்போது பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறுகையில்  யெவ்கெனி பிரிகோஜின்  ஆபத்தில் இருப்பதாக தான் பல சந்தர்ப்பங்களில் எச்சரித்ததாக தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட கிளர்ச்சியின் போது தான் இந்த எச்சரிக்கையை விடுத்த போதிலும்  பிரிகோஷின் தான் இறக்கத் தயார் எனக் கூறி அதனை மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் இருந்து நீ இறந்து விடுவாய்.  உன் கூட்டமும் இறந்துவிடும் என்று கூறினேன். ஆனால் என்ன நடந்தாலும் நான் இறந்துவிடுவேன் எனத் தெரிவித்தார். நான் வீரனாக சாவேன் என்று கூறினார் என அலெக்சாண்டர் லூகோசென்கோ தெரிவித்துள்ளார்.

இதை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் புடினை எனக்குத் தெரியும். அவர் ஒரு விவேகமான  அமைதியான நபர். புடின் இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை.’ எனக் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!