யாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக பறிப்போன குழந்தையின் உயிர்

யாழ்ப்பாணம் தாவடியில் ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மேலும் டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Visited 44 times, 1 visits today)