இந்தியாவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய பேருந்து -12 பேர் பலி!
இந்தியாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று கான்கிரீட் கட்டமைப்பிற்குள் நுழைந்து விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாகனம் சலாசரில் இருந்து சென்று கொண்டிருந்தபோது, லக்ஷ்மங்கரில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திகில் புகைப்படங்கள் பேருந்தின் சிதைந்த எச்சங்களைக் காட்டுகின்றன. உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கிரேன் மூலம் இடிபாடுகளை நகர்த்தியுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 200,000 இந்திய ரூபாய்கள் (சுமார் 1,829 பவுண்டுகள்) வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.