பீகாரில் கங்கை ஆற்றின் நடுவே நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது!
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில், கங்கை ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டு வருகின்ற பாலம் இடிந்து விழுந்துள்ளது.
கங்கை ஆற்றை கடக்கும் வகையில் பீகார் மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் பாலம் இரண்டாவது முறையாக உடைந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகல்பூரில் Aguwani-Sultanganj பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ லலித் நாராயண் மண்டல் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/airnewsalerts/status/1665356191453544448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1665356191453544448%7Ctwgr%5Ead919d8719503415b91a8057d73042c86fbb9c52%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fbihar-bridge-collapse-just-a-second