சிங்கப்பூரிலிருந்து சென்ற விமானத்தில் பிறந்த ஆண் குழந்தை

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த Indigo விமானத்தில் குழந்தை ஒன்று பிறசவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட டீப்தி சரசு வீரா வெங்கட்ராமனுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
விமானத்தில் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. விமான ஊழியர்கள், பெண் மருத்துவர், பெண் பயணிகள் சிலர் சேர்ந்து பிரசவத்திற்கு உதவினர்.
விமானி சென்னை விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு விவரம் அளித்திருந்தார்.
விமானம் சென்னையில் தரையிறங்கியதும், மருத்துவக் குழு டீப்திக்கு உதவத் தயாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தாயும் குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 28 வயது டீப்தி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
(Visited 31 times, 1 visits today)