ஐரோப்பா

சட்டவிரோத புலம்பெயர்வாளர்களை பிரான்சிலிருந்து விரைந்து வெளியேற்ற உதவும் மசோதா தள்ளிவைப்பு

பிரான்சில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், புலம்பெயர்தல் மசோதாவை தள்ளிவைத்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் மசோதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்காததால், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அந்த மசோதாவை நிறைவேற்றியது அரசு. அது தொடர்பான போராட்டங்கள் முற்றிலும் முடிவுக்குவந்ததுபோல் தெரியவில்லை.

இந்நிலையில், புலம்பெயர்தல் மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் , அந்த மசோதாவுக்கு போதிய ஆதரவு இல்லாததால், அதை இலையுதிர்காலத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.

இந்த மசோதா, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்றுவதை வேகப்படுத்தும் நோக்கிலும், பணியாளர் தட்டுப்பாடு நிலவும் துறைகளில் பணியாற்றுவோருக்கு குடியிருப்பு அனுமதி கிடைப்பதை எளிதாக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

அது குறித்துப் பேசிய எலிசபெத், புலம்பெயர்தல் மசோதா குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல, அது பிரான்சில் மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கக்கூடும் என்றார்.ஆகவே, மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தான் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அவர்

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்