சித்திரவதையில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுவன்
பெற்றோரின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்து பதுங்கியிருந்த 15 வயது சிறுவன் நேற்று அதிகாலை ஹட்டன் புகையிரத நிலையத்தில் சுற்றித்திரிந்த போது ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பதுளை நோக்கி இரவு தபால் ரயிலில் பயணித்து ஹட்டனில் இறங்கியதாகவும், பொலிஸ் அவசர சேவை பிரிவினரின் எச்சரிக்கைக்கு அமைய பொலிசார் அவரை அழைத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், அடிக்கடி துன்புறுத்தியதாகவும், அவர்களின் சித்திரவதையில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
தனக்கு ஒரு சகோதரனும் மூத்த சகோதரியும் இருப்பதாகவும் அவர்கள் அனுராதபுரத்தில் வசித்து வருவதாக அவர் கூறினார்.
தாம் பாணந்துறையில் தனது பாட்டியுடன் வசித்து வருவதாகவும், பாடசாலையில் கல்வி பயின்று வந்ததாக, பின்னர் தரம் 10 இல் கல்வி கற்கும் போது பெற்றோரால் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
முதுகில் காயம் ஏற்படுத்திய பெல்ட்டால் தந்தையால் கடுமையாக தாக்கப்பட்டதாக அவர் கூறினார். மீண்டும் பெற்றோருடன் வாழப்போவதில்லை என்று அந்த சிறுவன் கூறினான்.
அனுராதபுரம் ரயில் நிலையத்தில் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறி, பாணந்துறையில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் செல்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த அவர், கவனக்குறைவாக தவறான ரயிலில் ஏறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.