பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரான்ஸில் மகரந்த ஒவ்வாமை நோய் அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிச்சை விடுக்கப்பட்டுள்ளது.
சாதரணமாக பெப்ரவரி மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கும் மகரந்த ஒவ்வாமை நோய் இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது என பிரான்ஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நோயினால் பிரான்ஸில் முக்கால் வாசிக்கும் அதிகமானோர் பாதிப்படைவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகரந்த ஒவ்வாமை நோய் ஏற்பட காலநிலை ஐந்து செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேல் இருக்கவேண்டும், இவ்வாண்டும் வெப்ப ஆண்டாக இருக்கப் போகிறது என்பதினை இது காட்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகரந்த ஒவ்வாமை நோயினால் பாதிப்படையாமல் இருக்க, பகல் நேரத்தில் சாளரங்களை சாத்திவைத்தல், வெளியே செல்லும் போது முகமூடிகளை அணிதல், இரவில் வீட்டிற்கு வந்ததும் தலை முடி உட்பட உடலை நன்கு கழுவுதல், தேவையற்ற பயணங்களை கைவிடுதல் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.