செய்தி மத்திய கிழக்கு

மலிவான ஐபோன்களை விற்பனை செய்தவர் கைது!! பலரை தேடிவரும் அதிகாரிகள்

ஐபோன் தடைசெய்யப்பட்ட ஈரானில், மலிவான ஐபோன்களை வழங்கி பல மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர், மேலும் மேலும் பலர் சிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

குரோஷ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிதிக் குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

முக்கிய குற்றவாளிகளின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு முதல், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தயாரித்த அனைத்து புதிய ஐபோன் மாடல்களின் அதிகாரப்பூர்வ பதிவுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. அனைத்து ஐபோன் 15 மாடல்களையும் பாதிக்கும் வகையில் இந்த ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டது.

ஈரானில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஃபோன்களும் சட்டத்தின்படி நுழைந்தவுடன் பதிவு செய்யப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் தொலைபேசிகளுக்கும் இது பொருந்தும். இல்லையெனில் அவை தடை செய்யப்பட்ட பொருளாக கருதப்படும்.

 

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!