இந்தியா : சிவகங்கை மறை மாவட்ட தேவாலயத்தில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!

சிவகங்கை, ராமநாதபுரம் இரு மாவட்டங்களை ஒருங்கிணைத்த சிவகங்கை மறை மாவட்ட தலைமை தேவாலயமான சிவகங்கை அலங்கார அன்னை பேராலயத்தில் நள்ளிரவில் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து தேவாலய வளாகத்தில் இருந்த ஏழு காணிக்கை உண்டியல்களில் பணம் உட்பட பல்வேறு பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளார்கள்.
தேவாலயத்தை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி கதவுகள் ஜன்னல்களை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இந்த தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் வழிபடுவார்கள். சிவகங்கை நகரில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தேவாலயம் இதுவாகும் .
.கிறிஸ்துவர்களின் தவக்காலம் ஆரம்பமான சில தினங்களில் தேவாலயத்தில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(Visited 14 times, 1 visits today)