இலங்கையில் சமாதான நீதவான் பதவிக்கான கல்வி தகைமை குறைப்பு!
இலங்கையில் சமாதான நீதவான் பதவிக்கான கல்வி தகைமை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதான நீதவான் ஆக குறைந்த பட்ச கல்வி தகைமை க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த வருடம் நவம்பர் 27ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்தப்பட்டது .
இது தற்போது திருத்தப்பட்டு, இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் இரண்டு விசேட சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்துள்ள ஆளொருவராக இருத்தல் வேண்டும்.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல்க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் இரண்டு விசேட சித்திகளுடன் ஆறுபாடங்களில் சித்தியடையாதுள்ள ஆளொருவர் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட அத்தகைய ஆளினது உன்னதமான சேவையை கவனத்திற்கொண்டு சமாதான நீதவானொருவராக நியமிக்கப்படுவதற்கு அத்தகைய ஆள் பொருத்தமானவரென உறுதிப்படுத்தி எவரேனும் புகழ்பெற்ற மதத்தலைவரினால், அத்தகைய ஆளினது உள்ளூர் சமுதாயம் பற்றிய ஏதேனும் கழகத்தின், சேவையின் அல்லது சமூகத்தின் தலைவரினால் அல்லது தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட விதப்புரையினைக் கவனத்திற்கொண்டு அமைச்சரினால் நியமிக்கப்படலாம்.