அக்பருடன் சீதையை ஒன்றாக விடக்கூடாது!! விஷ்வ ஹிந்து பரிஷத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
திரிபுராவில் இருந்து வங்காளத்திற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்களில் ஒன்றுக்கு சீதை என்று பெயர் சூட்டுவதை எதிர்த்து விஸ்வ ஹிந்து பரிஷத் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகியது.
அக்பர் என்ற ஆண் சிங்கமும், சீதா என்ற பெண் சிங்கமும் ஒன்றாக இருக்கக் கூடாது என மனுவில் கோரப்பட்டுள்ளது.
பிப்ரவரி 12 ஆம் திகதி, திரிபுராவில் உள்ள செபாஹிஜாலா உயிரியல் பூங்காவில் இருந்து சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
சிங்கங்களில் ஒன்று ‘அக்பர்’ என்றும் மற்றொன்று ‘சீதா’ என்றும் பெயரிடப்பட்டது. அக்பருக்கு ஏழு வயது, சீதாவுக்கு ஆறு வயது. ஆனால் தற்போது சீதா அக்பரின் தோழி என்ற அடிப்படையில் இந்துத்துவா அமைப்புகள் முன் வந்துள்ளன.
அக்பர் என்பது முகலாய பேரரசரின் பெயர் மற்றும் சீதை என்பது ராமாயண காவியத்தில் ஒரு பாத்திரம். அவர் இந்து தெய்வமாக வழிபடப்படுவதாகவும் இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.