தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா..!
இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ஆன ரோஹித் சர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.
அவருடன் ஜடேஜாவும் கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருந்த நிலையில் தற்போது மார்க் வுட்டின் பந்து வீச்சில் அவுட் ஆகி உள்ளார்.
இந்த போட்டியில் அவர் 196 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். அதில் 14 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இவர் இந்திய அணியில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு கேப்டனாக அதிக சிக்சர் அடித்த பட்டியலில் எம்.எஸ்.தோனியின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.
தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 211 சிக்சர்கள் அடித்திருந்தார். தற்போது, ரோஹித் இந்த போட்டியில் அடித்த 3 சிக்சர்களை அடித்ததன் மூலம் கேப்டனாக ரோஹித் 212 சிக்சர்கள் அடித்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆன இயோன் மோர்கன் கேப்டனாக சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸ்ர்கள் அடித்து பட்டியலில் முதல் வீரராக இருந்து வருகிறார்.
அவர் கேப்டனாக சர்வதேச போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 233 சிக்ஸர்கள் அடித்து உள்ளார். ரோஹித் சர்மா கேப்டனாக இன்னும் 22 சிசிக்ஸர்களை சர்வதேச போட்டிகளில் அடித்தால் இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் 5 வீரர்கள் :
இயோன் மோர்கன் – 233 சிக்ஸர்கள்.
ரோஹித் சர்மா – 212 சிக்ஸர்கள்.
எம்எஸ் தோனி – 211 சிக்ஸர்கள்.
ரிக்கி பாண்டிங் – 171 சிக்ஸர்கள்.
பிரண்டன் மெக்கல்லம் – 170சிக்ஸர்கள்.