வெளிநாடு ஒன்றில் இருந்து நாடுகடத்தப்பட்டவுள்ள இலங்கையர்கள்!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கு மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட குழுவொன்று நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
25 இலங்கையர்களுக்கு மேலதிகமாக, 83 பங்களாதேஷ் பிரஜைகள், 46 இந்திய பிரஜைகள் மற்றும் 08 நேபாள பிரஜைகள் நாடு கடத்தப்படவுள்ளவர்களில் அடங்குவர்.
எவ்வாறாயினும், குறித்த வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கான குறிப்பிட்ட திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
(Visited 16 times, 1 visits today)