இலங்கை : பெலியத்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை!
பெலியத்த ஐவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் இன்று (13.02) தங்காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அங்கு தங்காலை பிரதான நீதவான் ஹேமந்த புஸ்பகுமார அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஏனைய சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வயங்கொடையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் மனைவி மற்றும் தந்தை மற்றும் கைது செய்யப்பட்ட காலி பஸ்ஸைச் சேர்ந்த 23 வயதான யுவதி ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)





