இந்தியா

சொகுசு பேருந்துடன் மோதி தீப்பிடித்த கார்… பரிதாபமாக உடல் கருகி ஐவர் பலி !

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேரூந்து – கார் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவின் மகாவான் பகுதியில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 40 பேருடன் சென்றுகொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்தும், ஒரு காரும் மோதிக் கொண்டன. தகவலறிந்த மதுரா பொலிஸார், அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், “இன்று அதிகாலை பிகாரில் இருந்து டெல்லி நோக்கி 40 பயணிகளுடன் சொகுசு பேரூந்து சென்று கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் கார், பேருந்தின் பின்பக்கம் மோதியுள்ளது. இதில் பேருந்து நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்தது. இரு வாகனங்களிலுமே தீ பரவியது.இதில் காரில் பயணித்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்ததும் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் விரைந்து கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது” என்றார்.

மதுராவில் ஆம்னி பஸ் - கார் மோதல்

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள், விபத்து காட்சிகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தால் மதுராவில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டத

(Visited 17 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!