ஆடுகளால் மனிதர்களின் உணர்வுகளை வித்தியாசம் காண முடியும் – ஆய்வில் தகவல்
ஆடுகளால் மனிதர்களின் உணர்வுகளை வித்தியாசம் காணமுடியும் என்று ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் மகிழ்ச்சியான குரலையும் கோபமான குரலையும் ஆண்டு கண்டுபிடித்துவிடும்.
மனிதர்களுக்கும் ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு நீண்டகாலமாக நீடிப்பதால் ஆடுகளுக்கு அந்தத் திறன் வளர்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
ஆடுகளுக்கு உணர்வுசார்ந்த நுண்ணறிவு இருப்பதை அது காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரின் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் 27 ஆடுகள் கலந்துகொண்டன. மகிழ்ச்சியான அல்லது கோபமான மனிதக் குரல்கள் ஒலிக்கப்பட்டன. அதை ஆடுகள் எவ்வாறு கையாள்கின்றன என்பது ஆராயப்பட்டது.
(Visited 12 times, 1 visits today)