ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்காக புதியதொரு சட்டம்
ஜெர்மனியில் புதிய பிரஜா உரிமை சட்டமானது நடைமுறைக்கு வருகின்றது.
ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்காக புதிய பிரஜா உரிமை சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக எஸன் நகரசபையில் உள்ள நகர வெளிநாட்டு அலுவலகம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பிரஜா உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தால் வருடம் ஒன்றுக்கு 25000 விண்ணப்பங்கள் அதாவது ஜெர்மனிய பிரஜா உரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக கூறி இருக்கின்றது.
ஜெர்மனிய நாட்டில் குறிப்பாக எஸன் நகரத்தில் பிரஜா உரிமை பெறுவதற்குரிய தொழிற்பாட்டு காலங்களானது 12 தொடக்கம் 18 மாதங்களாகவும், இந்த விடயம் தொடர்பாக 21 அதிகாரிகள் வேலை பார்ப்பதாகவும் கூறி இருக்கின்றார்கள்.
இந்நிலையில் 30 வருடங்களுக்கு முன்னர் வருடம் ஒன்றுக்கு இவ்வாறு ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்றுக்கொள்கின்றவர்கள் 247 ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.