IPLல் களமிறங்கும் ஷமர் ஜோசப்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 2024 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகிவிட்டது.
அந்த வகையில், ஷமர் ஜோசப் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட இருப்பதாக அந்த அணி அறிவித்து இருக்கிறது.
இவர் இங்கிலாந்தின் மார்க் வுட்-க்கு மாற்றாக லக்னோ அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப் தனி ஆளாக நின்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இந்த வெற்றி காரணமாக ஷமர் ஜோசப் உலகளவில் பிரபலமான வேகப்பந்து வீச்சாளராக மாறினார். முதல் முறையாக ஐ.பி.எல்.-இல் களமிறங்கும் ஷமர் ஜோசப்-க்கு லக்னோ அணி சார்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)