ஆசியா செய்தி

ஈரானுக்கு செல்லவுள்ள இந்தியர்களுக்கான முக்கிய நிபந்தனைகள்

உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இனிமேல் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்குச் செல்லும்போது விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும், விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது.

சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எக்காரணம் கொண்டும் இதை நீட்டிக்க முடியாது.

வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.

சுற்றுலாவுக்காக ஈரான் வருவோருக்கு மட்டுமே இந்த விசா இன்றி பயணம் என்ற முறை பொருந்தும்.

அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் தங்க விரும்பினால் அல்லது 6 மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினால், அவர் ஈரானிடம் இருந்து உரிய விசா பெறவேண்டும்.

ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!