ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் மீண்டும் ஒரு போர் நிறுத்தம்!
ஹமாஸ் நீண்ட போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, காஸாவில் சுமார் 4 1/2 மாதங்களுக்கு சண்டையை நிறுத்திவிட்டு பின்னர் மோதலை நிறுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒப்புதலுடன் கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகளால் ஹமாஸுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு பதிலளிக்கும் வகையில் ஹமாஸ் இந்த முன்மொழிவை அனுப்பியது.
முன்மொழிவு மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது.
அதன் முதல் கட்டத்தின் கீழ், மீதமுள்ள பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் காஸா பகுதியின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் இஸ்ரேலியப் படைகள் முற்றாக வெளியேற்றப்பட்டு இறந்தவர்களின் உடல்களை பரிமாறிக்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.