சீனாவில் கடுமையைான பனிப்பொழிவால் அவதிக்குள்ளான சாரதிகள்!
மத்திய சீனாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் சாலையில் சிக்கிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹூபே மாகாணத்தில் நீண்ட டிராஃபிக்கை வான்வழி படங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
பனிமூட்டம் காரணமாக சுமார் 4,000 வாகனங்கள் சிக்கிக்கொண்டதாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய சீனாவில் வழக்கத்திற்கு மாறான கடும் பனி பெய்வதாகவும், குறித்த பனியானது நாளையும் தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஹூபேயின் தலைநகரான வுஹானில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதைகள் பனிமூட்டம் காரணமாக பலமுறை தற்காலிகமாக மூடப்பட்டன.
அத்துடன் சில விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மணிக்கணக்கில் சிக்கித்தவித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)