தென்மேற்கு ஜெர்மனியில் தீ விபத்தில் ஐவர் படுகாயம்

ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் நேற்று பிற்பகல் திருவிழா மிதவை ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு ஜேர்மனியில் பிரான்சின் எல்லையை ஒட்டிய நகரமான கெஹ்லில் உள்ளூர் அணிவகுப்பில் பங்கேற்ற மிதவையின் ஒரு பகுதி தீப்பிடித்தது.
இதன்போது தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்க முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
(Visited 16 times, 1 visits today)