பாணந்துறை கடற்கரையில் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 6 பேர் மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 6 பேர், அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் இவ்வாறு உயிர் பிழைத்துள்ளனர்.
நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களை காப்பாற்றிய உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள், அவர்களுக்கு முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்த்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 12 times, 1 visits today)