ஜெர்மனியில் பணிப்புறக்கணிப்பால் பயணிகள் கடும் நெருக்கடி – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
ஜெர்மனி நாட்டில் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஜெர்மனியில் தொடருந்து போக்குவரத்து அமைப்பானது பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு இருந்தது.
அதாவது GDLF என்று சொல்லப்படுகின்ற தொழிற்சங்கமானது தமது அங்கத்தவர்களை சம்பளம் உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படுமாறு வேண்டி இருந்தது.
அதாவது வருகின்ற திங்கட்கிழமை பிற்பகல் 6 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறையில் இருக்கும் என்று இந்த அமைப்பானது ஏற்கனவே கூறி இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது GDLF என்று சொல்லப்படுகின்ற தொழிற் சங்கத்துக்கும், மற்றும் தொடருந்து திணைக்களத்துக்கும் பேச்சுவார்த்தையின் காரணமாக GDLFஎன்ற தொழிற்சங்கமானது தமது பணிப்புறக்கணிப்பை தாங்கள் திங்கட்கிழமை அதிகாலை 2 மணிக்கு முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.