ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவை வழங்க வேண்டும்

எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அதிக வெற்றியடையாத போதிலும், குறிப்பிட்ட அளவிலான வெற்றியை நோக்கி அவர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக வருவதற்கு எந்தத் தகுதியிழப்பும் தாம் காணவில்லை என திஸ்ஸகுட்டியராச்சி சுட்டிக்காட்டுகிறார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் யார், ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் திஸ்ஸகுட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)