மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா தீர்மானம்
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான திட்டத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், தாக்குதலுக்கான திகதி மற்றும் நேரம் குறித்த குறிப்பிட்ட அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
நிலவும் காலநிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்களைக் கொன்றதாக ஈரானிய ஆதரவு போராளிக் குழு குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் 41 ராணுவ வீரர்கள் அங்கு காயமடைந்தனர்.
எனினும், அமெரிக்காவின் அறிக்கையை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் இந்த தொடர் தாக்குதலை நடத்தவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, செங்கடலில் யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் செயற்பாடுகளை சீர்குலைக்க அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகளின் தாக்குதல்கள் இயலவில்லை என அண்மைய அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் கப்பல்கள் மீது 09 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த மூன்று வாரங்களில் 06 தாக்குதல்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்க நடவடிக்கைகள் ஜனவரி 11 அன்று தொடங்கியது, செங்கடலில் வணிக போக்குவரத்து இன்றுவரை 29 சதவீதம் குறைந்துள்ளது.