லண்டனில் அச்சுறுத்தலாக இருந்த நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்
தெற்கு லண்டனில் ஆயுதம் ஏந்திய ஊடுருவல்காரர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக மிரட்டியதாக செய்திகள் வந்தன.
கொல்லப்பட்டவருக்கு 30 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது பைவாட்டர் பிளேஸில் உள்ள வீட்டினுள் இந்த நபர் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.





