வீட்டை சோதனை செய்ய சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!! தந்தை மகன் கைது
அநுராதபுரம், மொறகொட மற்றும் கல்கட்டியாவ பிரதேசத்தில் வீடொன்றை பார்வையிடச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள் குழுவை தாக்கிய தந்தை மற்றும் மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொறகொட வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த வீட்டினை பரிசோதிக்க அதிகாரிகள் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த தந்தையும் மகனும் வீட்டை பரிசோதிக்க விடாமல் தடுத்து தாக்கியதாக அறியமுடிகின்றது.
மழுங்கிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அதிகாரி ஒருவர் யகல்ல, ஹுருலுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொறகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு வந்து சந்தேகத்திற்குரிய தந்தை மற்றும் மகன் இருவரையும் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டை சோதனையிட்ட போது, படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சியையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான தந்தை மற்றும் மகன் கஹட்டகஸ்திகிலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.