தென்கொரியாவில் பொரித்த பல்குத்தும் குச்சிகளை உட்கொள்ளும் மக்களுக்கு எச்சரிக்கை
தென்கொரியாவில் மாவுச்சத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொரித்த பல்குத்தும் குச்சிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த உண்ண வேண்டாம் என்று அந்நாட்டின் உணவு அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவற்றைக் காண்பதற்குப் பொரித்த உருளைக்கிழங்கைப் போல் இருக்கும்.
பல்குத்தும் குச்சிகளின் மீது தூளாக இருக்கும் பாலாடைக்கட்டியைத் தூவி மக்கள் உண்டு ருசிக்கும் காட்சிகளைக் காட்டும் காணொளிகள் TikTok, Instagram தளங்களில் பரவலாகப் பகிரபட்டு வருகின்றன.
உணவில் சேர்க்கப்படும் வண்ணம் அவற்றில் கலந்திருப்பதால் அவை பச்சை நிறத்தில் இருக்கும்.
“பொரித்த பல்குத்தும் குச்சிகளை உணவாக உண்பது பாதுகாப்பானதா என்பது இன்னும் தெரியவில்லை. தயவுசெய்து அவற்றை உண்ணவேண்டாம்” என்று தென்கொரிய உணவு, மருந்து பாதுகாப்பு அமைச்சு X தளத்தில் பதிவிட்டது.
(Visited 7 times, 1 visits today)