மெட்டா, கூகுள் மற்றும் யூடியூப் போன்ற தளங்களுடனான உறவுகள் பாதிக்கப்படும் – இலங்கை எம்.பி எச்சரிக்கை
இலங்கையின் ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தின் மூலம் மெட்டா, கூகுள் மற்றும் யூடியூப் போன்ற பிரதான தளங்களுடனான உறவுகள் பாதிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தும் அரசின் நடவடிக்கையை வன்மையாக எதிர்ப்பதாக அவர் கூறினார்.
மேலும், ஆன்லைன் பாதுகாப்பு மசோதா மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)