படைகளை வாபஸ் பெறுமாறு இந்தியாவுக்கு மாலைத்தீவு கோரிக்கை

மாலைத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மார்ச் 15ஆம் திகதிக்குள் தங்கள் நாட்டில் நிலைகொண்டுள்ள இந்தியப் படைகளை வாபஸ் பெறுமாறு மாலைத்தீவு அரசு இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளது.
தலைநகர் மாலேயில் நேற்று இடம்பெற்ற இரு நாடுகளின் உத்தியோகபூர்வ மட்ட கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் இந்திய அரசால் மாலைதீவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 02 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 80 பேர் மாலைதீவில் தங்கியுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என்று மாலைத்தீவு அமைச்சர்கள் குழு தெரிவித்ததையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் சர்ச்சை எழுந்தது.
(Visited 13 times, 1 visits today)