ரஷ்யாவிற்கு எதிராக போரில் களமிறங்கிய பிரித்தானிய படைகள் – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்
அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய ஆவணங்கள் கசிவு மூலம்இ ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு விமானப் படை செயல்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கடந்த வார இறுதியில் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்துஇ அவை உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ரகசிய ஆவணங்களில் இருந்து அடுத்தடுத்து திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில்இ சமீபத்தில் வெளியான செய்தி மூலம் போருக்கு முன்னதாக ரஷ்யாவிற்கு சுமார் 40இ000 ராக்கெட்டுகளை வழங்க எகிப்து ரகசியமாக திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில்இ தற்போது உக்ரைனில் போரில் ரஷ்ய படைகளுக்கு எதிராக பிரித்தானிய சிறப்பு படை பிரிவு நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக வெளிபாடுகள் தெரியவந்துள்ளது.
கசிந்த கோப்புகளில் மூலம் 50 பிரித்தானிய சிறப்பு படைகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும்இ அதில் பெரும்பாலும் எலைட் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (எஸ்.ஏ.எஸ்) படைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.