கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மோதல்!!! தப்பியோடிய பலர் கைது
வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று (12) மாலை உணவுப் பிரச்சினை தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருபத்தைந்து கைதிகள் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலின் போது கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து மேலும் ஐம்பது கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களில் 25 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடிய ஏனைய கைதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை இராணுவமும் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.
சோமாவதிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தப்பியோடிய ஏனைய கைதிகளை கைது செய்யும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.
மதிய உணவு வரிசையில் காத்திருந்த இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு கற்கள் மற்றும் தடிகளால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலத்த காயமடைந்த கைதிகளில் சிலரை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.