ஏழு ஆண்டுகள் இல்லாதளவில் சரிவை சந்தித்துள்ள சீனாவின் ஏற்றுமதி..
சீனாவின் ஏற்றுமதி, ஏழு ஆண்டுகள் இல்லாதளவில் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடனான பதட்டம் மற்றும் உலக பொருளாதார தடுமாற்றத்திற்கு பிறகான மீட்சி ஆகியவற்றால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் ஏற்றுமதியின் மதிப்பு சரிந்திருப்பது சீனாவிற்கு நெருக்கடிக்கடிகளை ஏற்படுத்தலாம் என கருதப்படுகின்றது.
அதன்படி , அமெரிக்காவுடனான வர்த்தகம் கடந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக சரிந்துள்ள அதே நேரத்தில் ரஷ்யாவுடன் வர்த்தகம், உக்ரைன் உடனான போர்ப் பதட்டத்தால் உண்டான பன்னாட்டு அழுத்தத்தால் இதுவரை இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் சில பிரச்னைகள் வரக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. அதேசமயம் பன்னாட்டு வணிகத்தில் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சீனாவின் சுங்கத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.