சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
சிங்கப்பூரில் விளம்பரங்களைக் கவனத்துடன் அணுகுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
TikTok, ஏனைய இணைய விற்பனை நிறுவனங்களில் வேலைக்கு எடுப்பதாகக் கூறும் விளம்பரங்களைக் கவனத்துடன் அணுகுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்தால் அதற்கேற்ற சம்பளம் வழங்கப்படுமென அந்த விளம்பரங்கள் கூறுகின்றன.
கடந்த மாதம் மட்டும் குறைந்தது 180 பேர் அந்த விளம்பரத்தை நம்பி 2.6 மில்லியன் வெள்ளி இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏமாற்றப்படவர்களுக்கு WhatsApp, Telegram போன்ற செயலிகள்வழி செய்தி அனுப்பப்படும்.
குறிப்பிட்ட சமூக ஊடகக் கணக்குகளைப் பின்தொடருமாறோ அந்தக் கணக்கிற்கு ஆதரவு தரும் வகையில் விருப்பத்தை தெரிவிக்குமாறோ அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பணம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பரிசு கிடைத்திருப்பதாகக் கூறி ஒருசிலர் ஏமாற்றப்பட்டனர்.
அதிகமாகச் சம்பாதிக்கலாம், அதற்கு ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்திற்குச் செல்லுமாறு சிலரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சம்பளத்தைப் பெற வேண்டுமானால் கூடுதல் பணம் செலுத்தவேண்டுமென அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.