இலங்கை செய்தி

தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் மத போதனை!! இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

சமூகத்தை சிதைக்கத் தூண்டும் நபர்களின் மத நம்பிக்கைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், மத போதனைகளை திரித்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை தடுக்கவும் அகற்றவும் அரசு புதிய சட்டங்களை இயற்றும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் சட்ட கட்டமைப்பிற்குள் ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை பின்பற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மையில் மத போதனையில் ஈடுபட்ட ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தற்கொலை செய்துகொண்டனர்.

மேலும் அவரது மத பிரச்சார நிகழ்வுகளில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்யை பெற்றுவருகின்றார்.

தற்கொலை செய்துகொள்ள தூண்டும் வகையில் இந்த மத போதனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!