பெண்ணை சிறைப்பிடித்து 4 ஆண்டுகள் துஸ்பிரயோகம் செய்த அமெரிக்க ராப்பர் கைது
ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கடத்திச் சென்று நான்கு ஆண்டுகளாக கேரேஜில் அடைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு உள்ளூர் ஹூஸ்டன் ராப்பர் கைது செய்யப்பட்டார்.
52 வயதான லீ ”வைபர்” கார்ட்டர் கைது செய்யப்பட்டு, ஹூஸ்டன் பொலிசாரால் மோசமான கடத்தல் குற்றச்சாட்டிற்கு உட்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருந்தபோது, வீதியில் சுற்றித்திரிந்த போது கடத்தப்பட்டதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
புகாரின்படி, கார்ட்டர் அந்தப் பெண்ணிடம் $1 கொடுக்குமாறு அணுகினார், பின்னர் அவளுக்கு உதவி தேவையா என்று கேட்டுத் திரும்பி வந்து, அவளை தனது காரில் ஏறச் சொன்னார். பின்னர் அவர் அவளை ஹூஸ்டனில் உள்ள பெர்ரி தெருவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பல ஆண்டுகளாக அவளை சிறைபிடித்தார் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அவனது சிறையிருப்பில் இருந்தபோது, அவனது கேரேஜில் தான் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், அங்கு தான் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அந்தப் பெண் கூறுகிறார்.
அவள் குளிப்பதற்கு கேரேஜிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும், சிப்ஸ் மற்றும் சிற்றுண்டிகள் மட்டுமே உணவாக வழங்கப்பட்டதாகவும், நீண்ட நாட்களாக முழு உணவை சாப்பிடவில்லை என்றும் அவள் மேலும் கூறினாள்.
அவள் பலமுறை தப்பிக்க முயன்றாள் ஆனால் பலனளிக்கவில்லை.
கார்ட்டர் தனது மடிக்கணினியைப் பயன்படுத்த அனுமதித்த பிறகு, அந்த பெண் இறுதியாக TextNow என்ற தகவல் தொடர்பு தளம் மூலம் பொலிஸைத் தொடர்புகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது ஹாரிஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது பத்திரம் $100,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அவர் பூர்வாங்க விசாரணைக்காக ஹூஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்..