சுவீடன் நோர்வே, டென்மார்க்கில் உச்சக்கட்ட பனிப் பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சமீப ஆண்டுகளில் மிக மோசமான பனிப் பொழிவு பின்லாந்து, சுவீடன் நோர்வே, டென்மார்க் போன்ற ஸ்கன்டிநேவியன் நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்வைப் பெரிதும் சீர்குலைத்துள்ளது.
பொதுப் போக்குவரத்துகள் முடங்கியுள்ளன. பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்படும் நிலை தோன்றியுள்ளது.
வீதிகளைப் பனி மூடியதால் வாகனங்கள் சிக்குண்டுள்ளன. வாகனங்களுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் உணவு, தண்ணீர் இன்றி நாள் பொழுதைக் கழிக்கும் நிலை பல இடங்களில் ஏற்பட்டது.
சுவீடனின் வட பகுதியில் வெப்பம் -40°Cஅளவுக்குக் கீழே வீழ்ச்சி கண்டிருப்பது கடந்த 25 ஆண்டுகளில்
இது முதல் முறை என்று காலநிலை அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)