ஐரோப்பா செய்தி

நோர்வேயில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை

நோர்வே எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் 30 வயதான தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.2024) இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் சடலம் கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பல் மருத்துவர் என கூறப்படுகின்றது. உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் பல்மருந்துவர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு அது தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!