ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த களமிறங்கும் படையினர்
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தற்காலிக உள்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் இரு அவுஸ்திரேலியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹிஸ்புல்லாஹ் செயற்பாட்டாளர் என தெரியவந்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
இதன்படி ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகவும், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கான திட்டங்களை தயார் செய்ய முடியும் எனவும் பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலும் தாக்குதல்கள் நிகழலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலைமையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினருடன் நெருக்கமாக செயற்படவுள்ளதாக பதில் உள்ளக அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.