பெறுமதிசேர் வரி குறித்து வரிகொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா விளக்கம்!
எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (28.12) விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தற்போதைய பெறுமதி சேர் வரி குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது இங்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கான VAT வரியை நடைமுறைப்படுத்துவதில் இருந்து துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.
அதன்படி, எரிபொருளுக்கான 18 சதவீத வாட் வரியை அமல்படுத்தும்போது, அதே வரியில் இருந்து 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.
மேலும், எரிவாயுவுக்கான 18 சதவீத வாட் வரியை அமல்படுத்தும்போது, அந்த வரியில் இருந்து 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.