உலகம் செய்தி

கண்டியில் திடீரென முறிந்து விழுந்த மரங்கள்!! பல வாகனங்களுக்கு சேதம்

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 08 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இன்று (27ம் திகதி) காலை 11 மணியளவில் அடுத்தடுத்து இருந்த போ மரமும், சப்பு மரமும் இவ்வாறு விழுந்து விட்டதாகவும், கனமழை காரணமாக இந்த மரங்களின் வேர்கள் அழுகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 8 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி தலைமையக பொலிஸார், மாநகர தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் நகர சபையினர் இணைந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த வீதியில் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!