“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த பரிசு
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி துவங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சர்வதேச அளவில் முக்கிய மற்றும் பிரபலமான திரைப்பட விழாவாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் “லைம்லைட்” பிரிவில் திரையிட விடுதலை – 1, 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் தேர்வாகி உள்ளன. இதேபோன்று “பிக் ஸ்கிரீன்” பிரிவில் இயக்குனர் ராமின் “ஏழு கடல் ஏழு மலை” படம் திரையிட தேர்வாகி இருக்கிறது.

சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகின் மூன்று படங்கள் தேர்வாகி இருப்பது ரசிகர்கள் இடையே பாராட்டை பெற்று வருகிறது.

(Visited 16 times, 1 visits today)





