டிக்டொக் செயலிக்கு 12.7 பில்லியன் அபராதம்!
பெற்றோரின் அனுமதியின்றி 13 வயது சிறுமியின் தனிப்பட்ட தரவை பயன்படுத்துவது, தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக டிக்டொக் செயலிக்கு 12.7 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு சொந்தமான டிக்டொக் செயலியானது தரவுப் பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொள்கிறது. இதன்காரணமாக சில நாடுகள் இந்த செயலிக்கு தடை விதித்துள்ளன.
அந்தவகையில் பிரித்தானியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 1.4 மில்லியன் சிறுவர்கள் டிக்டொக்கை பதிவிறக்கம் செய்துள்ளனர். குறித்த செயலியை பயன்படுத்த கணக்கை உருவாக்குவதற்கான குறைந்த பட்ச வயதெல்லை 13 ஆகும்.
எவ்வாறாயினும் தரவு பாதுகாப்பு குறித்து பிரித்தானியா கரிசனைக் கொண்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து தகவல் ஆணையர் ஜோன் எட்வர்ட்ஸ், எங்கள் குழந்தைகள் பௌதீக உலகில் பாதுகாப்பாக இருப்பதை போலவே டிஜிட்டல் உலகிலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய சட்டங்கள் இருக்கின்றன.
டிக்டொக் செயழி அந்த சட்டங்களுக்கு கீழ்ப்படியவில்லை. குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கத்தை காண்பிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர்