Facebook நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பெண் – இறுதியில் நேர்ந்த கதி
பேஸ்புக்கில் 4 மில்லியன் டொலரைத் திருடிய பெண் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
Facebook நிறுவனத்தில் வேலை செய்தபோது அந்தப் பணத்தைத் திருடியதாக அமெரிக்காவின் Barbara Furlow-Smiles என்ற பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை வேலை செய்தபோது அந்தத் திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவர் நம்பிக்கை மோசடி செய்திருப்பதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
Facebook நிறுவனத்தின் செலவுக்கான கணக்கைப் பயன்படுத்தி அவர் கலிபோர்னியாவிலும்
ஜோர்ஜியாவிலும் (Georgia) ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்ததாகக் குற்றச்சாட்டு சொல்கிறது.
சிகை அலங்காரம் உள்ளிட்ட பல செலவுகளுக்கு அவர் அந்தப் பணத்தைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சிகை அலங்காரம், குழந்தைப் பராமரிப்புக் கட்டணம் என்று பெரிய செலவு செய்ததாகவும் பாலர்பள்ளிக் கட்டணத்துக்கு அவர் 18,000 டொலர் செலவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் தன்னோடு குடும்பத்தினரையும் நண்பர்களையும் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தியதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் சொன்னார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.