பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்
 
																																		பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குவெட்டாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
