செய்தி தமிழ்நாடு

பூமி பூஜையின் போது மூன்று மத குருமார்களுடன் வழிபாடு செய்து தொடங்கி வைத்தார்

மொளச்சூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜையின் போது மூன்று மத குருமார்களுடன் வழிபாடு செய்து தொடங்கி வைத்த மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என மூன்று மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாகுபாடு இன்றி ஒற்றுமையாக மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தேச ஒற்றுமையை

பேணி காக்க வகையில் ஊராட்சியை வழிநடத்தி செல்லும் இம்மக்களின் பேராதரவைக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டனி வினோத்குமார் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு கவுன்சிலர் ரஞ்சினி ஜெரால்டு கலந்துகொண்டு ஊராட்சி ஒன்றிய குழு பொது நித்திலிருந்து

ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில்  சாலை அமைக்கும் பணியினை தொடங்க பூமி பூஜையின் போது இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் ஆகிய மூன்று குருமார்களை கலந்து கொண்டு தங்கள் மத வழிபாட்டின்படி வழிபாடு செய்து சாலை பணையினை தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர் இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மொளச்சூர் ஊராட்சி துணை தலைவர் அமல்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் ராஜா, பிரபு, கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி